Ekkalamum Nan - எக்காலமும் நான்
Scale: G Major - 2/4
எக்காலமும் நான் துதிப்பேன்
உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன்
இதயம் பாடும் ஹாலேலுயா
1.துதிகள் மத்தியில் வாசம்
செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
தூதர் போற்றும் தூய தூயர்
பரிசுத்தத்தை தாருமே
கைகள் தட்டி சேர்ந்து பாடி
உந்தன் நாமம் உயர்த்தவே
- எக்காலமும்
ஹாலேலுயா,ஹாலேலுயா
ஹாலேலுயா ஆ ஆமென் - 2
2. சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
இந்த நாளிலும் செய்வாரே
நேற்றும் இன்றும் மாறா நேசரே
அற்புதத்தை செய்வாரே
- கைகள் தட்டி
3. தோளில் என்னை சுமந்தீரே
தாழ்வில் என்னை தேற்றினீர்
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
கன்மலைமேல் உயர்த்தினீர்
- கைகள் தட்டி
Song Description: Tamil Christian Song Lyrics, Ekkalamum Nan, எக்காலமும் நான்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Ekkaalamum Naan, Ekkaalamum Nan, Nandri 5.