Thevan Ezhuthidum Kaaviyam - தேவன் எழுதிடும் காவியம்



தேவன் எழுதிடும் காவியம்
நீயும் நானும் அதின் வரிகளே
வாழும் வாழ்க்கை அதில் ஓவியம்
இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே

செல்வம் தேடி அலைகிறோம்
பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம் மறக்கிறோம்
இவை சரிதானோ ?

படைப்பை தேடி அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை இழக்கிறோம்
இவை சரிதானோ ?

நெஞ்சம் உன்னை கேட்கும்
கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு x2

பறவையை கொஞ்சம் உற்றுப் பார்
அது விதைத்து அறுக்கிறதோ
அவைகளை நடத்தும் தேவன்
உன்னை அனுதினம் மறப்பாறோ

யாருக்கும் நில்லா நேரம்
அது விரைந்து மறைகிறதே
கவலையை மட்டும் நினைத்தால்
அது தனக்குள் அழுகிறதே

துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு
அது இனிமை சேர்க்கும்
இயேசுவை கொஞ்சம் நினைத்திடு
அதில் புதுமை சேர்க்கும்

கவலைகள் கொங்சம் அகற்றிடு
அது அழகு சேர்க்கும்
தேவனை கொஞ்சம் நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்


Song Description: Tamil Christian Song Lyrics, Thevan Ezhuthidum Kaaviyam, தேவன் எழுதிடும் காவியம்.
KeyWords:  New Christian Song Lyrics, Giftson Durai, Konjam Siri.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.