Yesu Raja Enai - இயேசு இராஜா எனை
இயேசு இராஜா எனை
ஆளும் நேசா - 4
இயேசு இராஜா
1. மாசிலா மணி ஆன
முச்சுடர் மேசியா அரசே-2
மனுவேலே மாமறை
நூலே தேவ செங்கோலே
இங்கெனின் மேலே
அன்பு செய்
- இயேசு இராஜா
2. தாவீ தரசன் மைந்தா
நின் சரணம் சரணம் எந்தா!-2
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்!
- இயேசு இராஜா
3. ஐயா என் மனம் ஆற்றி
உன தடிமை எந்தனை தேற்றி-2
குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
மெய்ப் பாக்கியம் கொடு
- இயேசு இராஜா
4. சுத்த திருத்துவ வஸ்துவே
சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித்
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்!
- இயேசு இராஜா
5. மங்களம் ஈசாவே வளம்
மிகும் சங்கையின் ராசாவே-2
நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே!
- இயேசு இராஜா
Songs Description: Christian Song Lyrics, Yesu Raja Enai, இயேசு இராஜா எனை.
KeyWords: Tamil Christian Song Lyrics, Clement Vedanayagam Sasthriyar, Beryl Natasha, Vedanayagam Sasthriyar.