Theerkan Uraitha Theerkamae - தீர்க்கன் உரைத்த தீர்க்கமே



தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
ஆகம நிறைவேற்றமே
இஸ்ரவேலின் பாடலே
பூர்வகால தேடலே

எந்தன் முகவரி சேர்ந்ததே
புறஜாதி என்னை மீட்டதே

மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர்
இவரை அன்றி வேறு ஏது ரட்சகர்

இவருக்கீடு வேறில்ல
இவர் நாமத்திற்கு இணையில்ல
எந்தன் இயேசுவே...


1. தமது சாயலை மனிதனில்
நம் தேவன் வைத்தது அதிசயம்
தேவன் தாமே படைத்ததை
அவன் ஆள செய்ததும் அதிசயம்

பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம்

அதை மீட்க வந்த நிவாரணம்
அவர் மனித மீட்பின் பூரணம் - 2
எந்தன் இயேசுவே...

திரன திரன ன ன திரன திரன ன ன தீ ........ தீ...
திரன திரன ன ன திரன திரன ன ன தீ ........ தீ...

2. வார்த்தை மாம்சமானதால்
என் மாம்சம் ஆவியானதே
ரட்சணியத்தின் கீர்த்தனை
புற ஜாதி வீட்டிலும் தொனிக்குதே

மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே

பாதை இல்லா இடங்களில்
புது ஜீவ பாதை திறந்ததே - 2
எந்தன் இயேசுவே...


Songs Description: Tamil Christian Song Lyrics, Theerkan Uraitha Theerkamae, தீர்க்கன் உரைத்த தீர்க்கமே.
KeyWords: John Jebaraj, Levi - 5, Theerkkan Uraitha Theerkkame, Theerkan Uraittha Theerkkamae, Theerkkan Uraitha Theerkamey.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.