Um Tholgal - உம் தோள்கள்
தோள் மேல் தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி போனேன் மார்பிலே
அரிதான அன்பே ஆறுதல் தருமே
அப்பா உம் தோள்களிலே
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே- 2
1.நேசத்தால கரைஞ்சி போயி
பூமியில உம்மோட பாதம் வச்சீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசால பாசம் தந்தீர்
வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே
சாய்வேனே எந்நாளுமே
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே- 2
2.கசங்கியே நான் கலங்கி நின்னேன்
ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க
தொல்லையாய் என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரய்யா
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே- 2
Song Description: Tamil Christian Song Lyrics, Um Tholgal, உம் தோள்கள்.
KeyWords: Isaac Dharmakumar, Isaac.D, Thol Mel Thookki, Um Tholgal.