Thayakkam Yeno - தயக்கம் ஏனோ
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது-2
நீ தேடும் அமைதி இவரில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
- தயக்கம் ஏனோ
1. அன்பென்னும் வார்த்தைக்கு
அர்த்தமே இவர் தான்
கருணையின் அவதாரம்
இவரே இவர் தான்
இருண்டதோர் நிலைமையின்
விடியலும் இவர் தான்
வாடின வாழ்க்கையின்
வசந்தமே இவர் தான்
நாடிடு இவரை ... அமைதியே
- தயக்கம் ஏனோ
2. நொறுங்கின இதயத்தை
ஏற்பவர் இவர் தான்
நறுங்குண்ட மனதுக்கு
ஒளஷதம் இவர் தான்
மன்னிப்பின் ஸ்வரூபம்
இவரே இவர் தான்
மனுக்குலம் மீட்கும்
மீட்பரும் இவர் தான்
இவரது நாமம் இயேசுவே
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது-2
நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
Song Descripttion: Tamil Christian Song Lyrics, Thayakkam Yeno, தயக்கம் ஏனோ.
Keywords: Beryl Natasha, Thayakkam Eno, Thayakam Yeno, Melchi Evangelical, Priscilla Paul.