Thalai Nimira Seithaar - தலை நிமிர செய்தார்



தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார் - 2

நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர

சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

நம் கர்த்தர் நல்லவரே-2

குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம்

நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர


Song Description: Tamil Christian Song Lyrics, Thalai Nimira Seithaar, தலை நிமிர செய்தார்.
KeyWords: Vijay Aaron. Christian Song Lyrics, pls 4, Power Lines Vol - 4, Thalai Nimira Seithar.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.