Deva Pitha Enthan - தேவ பிதா எந்தன்



தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் ங்கு கண்டஞ்சேனே வான பரன்
என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்
எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்
கொண்டென் தலையைச்
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்
வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Deva Pitha Enthan, தேவ பிதா எந்தன்.
KeyWords: Christian Song Lyrics, Traditional Song Lyrics, Sri Nisha, Golden Hits.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.