Yeshu Kathavai Thiranthaal - இயேசு கதவை திறந்தால்
இயேசு கதவை திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை
திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார்
- இயேசு கதவை
சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடி போவார்
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்
அவர் கிருபையால் என்னை தாங்கிடுவார்
- இயேசு கதவை
வெண்கல கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோ மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார்
இயேசு ஒரு வார்த்தை சொன்னால்
யாராலும் எதிர்க்க முடியவில்லை
இயேசு விடுதலை தந்தால்
யாராலும் தடுக்க முடியவில்லை
- திறந்திடுவார்
Songs Description: Tamil Christian Song Lyrics, Yeshu Kathavai Thiranthaal, இயேசு கதவை திறந்தால்.
KeyWords: Yesu Kathavai Thiranthaal, Steven Samuel Devassy, Soul Winner.