Kirubaiyinaal Naan - கிருபையினால் நான்
'
கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
கருணையினால் நான் மீட்கப்பட்டேன்-2
குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு
வார்த்தை நெஞ்சத்துல என் வாழ்க்கை உச்சத்துல
அப்பாவின் கரத்தில குறையே இல்ல
கவலப்பட்டதில்லை தோல்விய தொட்டதில்ல
எல்லாமே அவரோட வார்த்தையால
கீழ கிடந்த என்ன தூக்கி விட்டாரே
வெல்ல துடித்த எனக்கு வெற்றி தந்தாரே-2
பட்டம் தேவை இல்ல பதவியும் தேவை இல்ல
திட்டம் வார்த்தையில குறையே இல்ல
சட்டம் செய்யவில்ல மொத்தம் கிருபையில
வட்டம் எனக்கொரு வரையே இல்ல
குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு
- வார்த்தை நெஞ்சத்துல
இரக்கத்தினால் என்னை விலை கொடுத்து
பாசத்தினால் என்னை அரவணைத்து-2
அப்பா என்னோட வாழ்வில எப்போதும்
தப்பா நான் ஒருநாளும் போவதில்ல
வெறுப்பா என் முன்ன வருகிற சாத்தானை
நெருப்பா விரட்டிடும் அப்பாவுண்டு
குற்றங்குறை பாக்காம பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே அவர் மேல ஏற்றினாரு
- வார்த்தை நெஞ்சத்துல
Song Description: Tamil Christian Song Lyrics, Kirubaiyinaal Naan, கிருபையினால் நான்.
KeyWords: Vijay Aaron. Christian Song Lyrics, pls 5, Power Lines Vol - 5.