Nam Devan Vettri - நம் தேவன் வெற்றி
நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடி கொண்டாடுவோம் - 2
முழு உள்ளத்தோடு
உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு
உம்மை உயர்த்திடுவோம் - 2
கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒரு மனதோடு உம்மை உயர்த்திடுவோம் - 2
- நம் தேவன்
பார்வோனின் சேனை துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே - 2
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே - 2
- கரங்களை தட்டி
சர்வாயுதங்கள் தரித்துக்கொண்டு
சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் - 2
பாவத்தை உதறி தள்ளிடுவோம்
பரிசுத்தமாகிடுவோம் - 2
- கரங்களை தட்டி
Song Description: Tamil Christian Song Lyrics, Nam Devan Vettri, நம் தேவன் வெற்றி.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Isaac Dharmakumar, Nam Dhevan, Nam Thevan.