Nan Kiristhuvukku - நான் கிறிஸ்துவுக்கு
நான் கிறிஸ்துவுக்கு
பைத்தியக்காரன் நீ யாருக்கு
வீண் பெருமை புகழ் ஆஸ்தி
குப்பை என்று தள்ளிடு
நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல
காணப்பட்டாலும்
விண் வாழ்வுக்காக உலகை
வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடு - 2
பலவான்களை வெட்கப்படுத்தவே
பெலவீனரை தேவன்
தெரிந்துக்கொண்டாரே - 2
ஞானவான்களை பைத்தியமாக்கவே
பைத்தியகங்ளை தேவன்
தெரிந்துக் கொண்டாரே
நகையிலே பைத்தியம்
புகையிலே பைத்தியம்
உடையிலே பைத்தியம்
எதற்க்கு நீ பைத்தியம்
மண்ணாசை பைத்தியம்
பெண்ணாசை பைத்தியம்
மயக்க மருந்து பைத்தியம்
நீ எதற்க்கு பைத்தியம்
சாராய பைத்திம்
பீர் ஜின் பைத்தியம்
ரம் விஸ்கி பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்
காபி டீ பைத்தியம்
பதவி ஆசை பைத்தியம்
ஆளுக்காக பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்
தேவன் முன்னிலே
உலக செல்வம் அழியுமே
உயர்ந்த ஆடைகள்
பொட்டரித்துப் போகுமே - 2
உலக ஞானமே
தேவன் பார்வையிலே
உதவா பைத்தியம் என்று ஆகுமே
சினிமாவிலே பைத்தியம்
சூதாட்ட பைத்தியம்
பணத்திலே பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்
கட்சியிலே பைத்தியம்
வீண் பேச்சு பைத்தியம்
குதிரை பந்தய பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்
ஆனந்த விகடன் பைத்தியம்
ரானி புக்கு பைத்தியம்
பேசும் படம் பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்
சாவி குங்குமம் பைத்தியம்
குமுதம் கல்கி பைத்தியம்
சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்
கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது
உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே - 2
சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்
வெத்தலை பாக்கு பைத்தியம்
புகையில பைத்தியம்
தூக்கத்திலே பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்
உணவிலே பைத்தியம்
ஊர் சுற்றும் பைத்தியம்
சிற்றன்ப பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்
லிப்ஸ்டிக் பைத்தியம்
குயுட்டக்ஸ் பைத்தியம்
ஐடெக்ஸ் பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்
சீட்டுகட்டு பைத்தியம்
கிரிக்கட்டு பைத்தியம்
மேல் நாட்டு பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்
தாழ்வும் உயர்வுமே
இயேசுவுக்காகவே
வாழ்ந்து நானுமே
இரத்த சாட்சியாகவே - 2
ஏழ்மை வந்திடினும்
எதிர்ப்பு நேரிடினும்
வாழ்வும் இயேசுவுக்கே
என் சாவும் இயேசுவுக்கே
- நான்
Songs Description: Tamil Christian Song Lyrics, Nan Kiristhuvukku, நான் கிறிஸ்துவுக்கு.
KeyWords: Dr. Justin Prabhakaran, Christian Song Lyrics, Naan Kiristhuvukku, Nan Kristhuvukku.