Rojapoo Vaasamalargal - ரோஜாப்பூ வாசமலர்கள்
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)
1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம்
– ரோஜாப்பூ
2. மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம்
– ரோஜாப்பூ
3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம்
– ரோஜாப்பூ
4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம்
– ரோஜாப்பூ
Songs Description: Tamil Christian Song Lyrics, Rojapoo Vaasamalargal, ரோஜாப்பூ வாசமலர்கள்.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Roja Poo Vasamalargal, Rojaapoo Vasamalargal.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Roja Poo Vasamalargal, Rojaapoo Vasamalargal.