Pareer Getsamane - பாரீர் கெத்சமனே



பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி யெனக்காய்
வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காகவே

அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய
என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே

இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே

மும்முறை தரைமீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே

அன்பின் அருள்மொழியால்
ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நெந்து அலறுகின்றார்

என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Pareer Getsamane, பாரீர் கெத்சமனே.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Paareer Getsamane, Paarir Getsamane, Paareer Getsamanae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.