Anbin Naayagane - அன்பின் நாயகனே
அன்பின் நாயகனே
ஆறுதலின் ஊற்றே
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
உம்மை நேசிக்கிறேன்
1. அலைகள் படகை ஆழ்த்தும்போது
காற்று பலமாய் அடிக்கும்போது
படகு முழுகும் நிலை வரும்போது
நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது
'பயப்படாதே நான் உன்னுடனே
மகனே நான் உந்தன் அருகில் தானே
எந்தன் காவல் உனக்கல்லவா
என்ற அன்பை நான் மறப்பேனோ
2. எந்தன் வாழ்வின் தூயவனே
வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே
உம்மை விட்டு எங்கு செல்வேன்
உந்தன் பின்னால் வருவேனே
உந்தன் சித்தமே என் வாழ்வில்
உந்தன் அழைப்பே என் மனதில்
என்னையே என்றும் உமக்கென
தந்த அன்பை நீர் மறப்பீரோ
Song Description: Tamil Christian Song Lyrics, Anbin Naayagane, அன்பின் நாயகனே.
Keywords: Promodh Johnson, Christian Song Lyrics. New Christian Song Lyrics, Anbin Nayagane, Anbin Nayaganae.