Ivare Perumaan - இவரே பெருமான்
பல்லவி
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான் - இவரே பெருமான்
சரணங்கள்
1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு
பவவினை யாதுமே தெரியார் - இப்
புவனமீது நமக்குரியார் - இவரே
2. குருடர்களுக் குதவும் விழியாம் - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் - இவரே
3. பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி - இவரே
4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் - இவரே
5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் - இவரே
6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் -நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் - இவரே
Song Description: Tamil Christian Song Lyrics, Ivare Perumaan, `இவரே பெருமான்.
KeyWords: DGS Songs, Jesus Calls, Ivarae Peruman, Dhinakaran Songs.
KeyWords: DGS Songs, Jesus Calls, Ivarae Peruman, Dhinakaran Songs.