Ithuvarai Seitha - இதுவரை செய்த
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் - 2
1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - 2
2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி - 2
3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Ithuvarai Seitha, இதுவரை செய்த.
Keywords: Christian Song Lyrics, Ithuvarai Seitha Seyalgalukkaaga.