Enthan Thaazvil Ennai - எந்தன் தாழ்வில் என்னை



எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை
உந்தன் நாமம் உயர்த்திடுவேன் - 2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியாலே துதித்திடுவேன் - 2
                                               - எந்தன் தாழ்வில்

கடந்த நாட்களில் கண்ணின் மணிபோல்
கருத்துடன் நீர் காத்தீரே - 2
கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய் - 2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2
                                               - எந்தன் தாழ்வில்

கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினிரே - 2
வழிகளில் நான் இடறிவிடாமல்
கருணை கரத்தால் உயர்த்தினிரே - 2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2
                                               - எந்தன் தாழ்வில்

உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையாலென்னை தாங்கினிரே - 2
மனிதர் யாவரும் மறந்திட்ட போதும்
மறவாமல் என்னை நினைத்தவரே - 2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2
                                               - எந்தன் தாழ்வில்


Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Thaazvil Ennai, எந்தன் தாழ்வில் என்னை.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.