Worship Lyrics - Alwin Thomas



நன்றியால் துதிபாடு நம் இயேசுவே
நாவாலே என்றும் பாடு - 2
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார் - 2 
                                                 - நன்றியால்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் - 2

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே - 2
                                        - எந்த காலத்திலும்

என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே
இயேசென்னை ரெட்சித்தார் நான் ஆடி பாடுவேன்
எவரும் அறியாரே என்னுள்ளம் பொங்குதே
என்னுள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே - 2

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - 4

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா
இயேசு என்னை ரெட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே - 2

வல்லமை உண்டு உண்டு அற்ப்புத வல்லமை
இயேசுவின் ரெத்தத்தால்
வல்லமை உண்டு உண்டு அற்ப்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

There is Power Power Wonder Working Power
In the Blood Of the Lamb
There is power power Wonder Working Power
In the Precious Blood Of the Lamb

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை - 2

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா - 2

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர் - 2

மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே - எங்கள் - 2

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை - 2

பெந்தெகோஸ்தே நாளைப்போல
பெரிதான முழக்கத்தோடு - 2
வல்லமையாய் இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - இப்போ - 2

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எங்கள் தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - 2



Songs Description: Tamil Christian Song Lyrics, Worship Lyrics , Alwin Thomas
KeyWords: Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, Worship Song Lyrics, Combined Worship Songs, Continuous Worship Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.