Vallamaiyin Aaviyanavar - வல்லமையின் ஆவியானவர்

Vallamaiyin Aaviyanavar - வல்லமையின் ஆவியானவர்


Scale: D Minor - 6/8


வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்

பவர் ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை

கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும் நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்

உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன்
நான் எப்போதும் சுவை தருவேன்

கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல்
பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்

தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை


Song Description: Tamil Christian Song Lyrics, Vallamaiyin Aaviyanavar, வல்லமையின் ஆவியானவர்.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, vallamaiyin aaviyanaar songs, vallamaiyin aaviyanaarsongs lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray