Um Naamam Uyartha - உம் நாமம் உயர்த்த



உம் நாமம் உயர்த்த  உம்மையே துதிக்க
இந்த ஓர் நாவு போதாதைய்யா
உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற
இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா

ஆயிரம் நாவுகள் வேண்டும்
ஆயிரம் ஜீவியம் வேண்டும் - 2
ஆனாலும் நீர் செய்த நன்மைகள்
விவரித்து சொல்ல இயலாதே - 2

தாயின் கருவில் கண்டவரே
தயவாய் இதுவரை சுமந்தவரே - 2
தகப்பனின் மேலாய் காப்பவரே
தரணியில் உமக்கு நிகருமுண்டோ - 2
                                            - ஆயிரம் நாவுகள்

பாவங்கள் சுமந்த பரிசுத்தரே
பரிகார பலியாய் மரித்தவரே - 2
ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர்
ஜீவனில் உமக்கு நிகருமுண்டோ - 2
                                            - ஆயிரம் நாவுகள்

வாக்குத்தத்தங்கள் தந்தவரே
வாக்கை நிறைவேற்ற வல்லவரே - 2
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ - 2

Songs Description: Christian Song Lyrics, Um Naamam Uyartha, உம் நாமம் உயர்த்த.
KeyWords: Tamil Christian Song Lyrics, Um Namam Uyartha, Um Namam Uyartha.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.