Neer Ennai Thedi Varaathirunthaal - நீர் என்னை தேடி



நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரித்திருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன் - 2
என் தேவா என் ராஜா
உம் கிருபை போதுமே - 2

தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் - என்னைத்
தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே - 2
சொத்தோ சுகமோ தேவையில்லை
சொந்தம் பந்தம் நாடவில்லை - 2
                                             - என் தேவா

உழையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
உழையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவையில்லை
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்...
                                                                 - என் தேவா

தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
தாயின் கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
அன்பே எந்தன் ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
                                              - என் தேவா


Song Description: Tamil Christian Song Lyrics, Neer Ennai Thedi Varaathirunthaal,
Keywords: Sreejith Abraham Songs, Christian Song Lyrics, நீர் என்னை தேடி வராதிருந்தால்.

Pray For Our Nation For More.
I Will Pray