Master's Choice - எஜமான் தேடும் பாத்திரம்





எஜமான் தேடும் பாத்திரம்...


எஜமான் பயன்படுத்தும்படியாகப் பாத்திரத்தை தேடினார்.அவருக்கு முன்பாக அனேக பாத்திரங்கள் இருந்தன. அவர் எதைத் தெரிந்து கொள்ளப்போகிறார்?

நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது. நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறவன். என் அழகும் என் ஜொலிப்பும் மற்ற எல்லாரைக் காட்டிலும் மிஞ்சியது.
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது."என்னை பயன்படுத்தும்" என்றது பொற்பாத்திரம் 
பதில் ஏதும் சொல்லாமல் எஜமான் கடந்து சென்றார்.

ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்.
என் அன்பார்ந்த எஜமானே, நான் உம்மையே சேவிப்பேன், உமக்கு திராட்சை ரசம் ஊற்றித்தருவேன் நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன். என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!. நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்.தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு. கடக்க முற்பட்டவரை, எஜமானே நான் இங்கே இருக்கிறேன்" எல்லா மனிதர்களும் பார்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும் நான் அலங்கரமாயிருப்பேன் என்றது.

 "எஜமானே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம். எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும் ,பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது.

எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார். சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது.

எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார். கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவாரற்ற நிலையில் கிடந்தது.

எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்.இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்.பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை. அலமாரியில் அலங்காரமாய் இருப்பதும் எனக்கு தேவையில்லை. பெரிய வாயோடு பெருமை பாராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை.

தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை.
களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு.
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று".

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். (1 கொரிந்தியர் 1:27 - 29)

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசாயா 64:8)




Description: Master's Choice - எஜமான் தேடும் பாத்திரம்.
Keywords: Devotional Tamil, Tamil Christian Devotional Message, Tamil Devotional Message.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.