Maraname Un Koor Enge - மரணமே உன் கூர் எங்கே

Maraname Un Koor Enge - மரணமே உன் கூர் எங்கே


Scale: D Minor - 2/4


மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணத்தை ஜெயித்த
மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்கு தந்து விட்டார்

சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்

பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார்.

அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்குள் வாழ்வோர்
கிறிஸ்துவுக்குள் மரித்தோர்
எதிர்கொண்டு சென்றிடுவோம்

பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

அகரமும் நகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்


Song Description: Tamil Christian Song Lyrics, Maraname Un Koor Enge, மரணமே உன் கூர் எங்கே.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Resurrection Day Songs.

Please Pray For Our Nation For More.
I Will Pray