Hallelujah Thuthi - அல்லேலூயா துதி

Hallelujah Thuthi - அல்லேலூயா துதி



அல்லேலூயா துதி மகிமை - என்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா

சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடியே வருவாயா

மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்

ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு

சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே

கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்


Song Description: Tamil Christian Song Lyrics, Hallelujah Thuthi Magimai, அல்லேலூயா துதி மகிமை.
KeyWords: Worship Songs, Allelua Thuthi Mahimai.
Please Pray For Our Nation For More.
I Will Pray