Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம்

Ekkalam Oothiduvom - எக்காளம் ஊதிடுவோம்



Scale: G Major - 2/4


எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
 தெருத்தெருவாய் நுழைந்திடுங்கள்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்

தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெயித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்

அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்


Song Description: Tamil Christian Song Lyrics, Ekkalam Oothiduvom, எக்காளம் ஊதிடுவோம்.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, ekkalam oothiduvom songs, ekkalam oothiduvom songs lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray