Cell Phone - கைப்பேசி
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களை காத்து கொள்வீர்களாக - 1 யோ 5:21
Cell phone ஆகிய விக்கிரகம்:
இன்று முழு உலகத்தையும் பாவத்துக்குள் வழி நடத்தும் ஒரு பயங்கரமான சாதனம் Android Cell phone. இதை போன்று உலகத்தை அழித்தது வேறு எதுவுமில்லை. முழு உலகமும் இன்று அதின் மகுடி நாதத்துக்கு அடிபணிந்து கிடக்கிறது. சிறியோர் முதல் வயோதிபர் வரை எப்போதும் cell phone மை நோண்டி கொண்டு இருப்பதை இந்நாட்களில் எங்கும் காணலாம். Android cell phone பிசாசின் கொடிய ஆயுதம்.
அநேக தேவ மக்கள் cell phone க்கு அடிமையாக கிடக்கின்றார்கள். தேவ ஊழியரும் இதில் அடங்குவர். கிறிஸ்தவ மக்கள் தங்கள் அதிகமான நேரத்தை cell phone பார்ப்பதில் செலவிடுகின்றனர். வாலிப பிள்ளைகள் இரவு 1 மணி 2 மணி வரை cell phoneயை நோண்டி கொண்டு இருப்பதை இந்நாட்களில் காணலாம். அநேக தேவ பிள்ளைகளின் தலையணை அருகில் cell phone இருக்கும். காலை எழுந்தவுடன் தனி ஜெபம், வேத தியானம் இருக்காது, cell phone யை எடுத்து பார்த்து கொண்டிருப்பதை இந்நாட்களில் எங்கும் காணலாம்.
சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் (ஊழியர்) இடம் தொடர்பு கொண்டு பிரதர் இந்த group ல் இந்த செய்தியை பார்த்திர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் "பிரதர் நான் இரவு 8 மணிக்கு மட்டும்தான் phone யை open பண்ணி 15 நிமிடம் மட்டுமே எனக்கு வந்த செய்திகளை பார்ப்பேன், மற்ற நேரங்களில் cell phone யை தொடமாட்டேன் என்று கூறினார்". ஆ எவ்வளவு மேன்மையான பரிசுத்த ஜிவியம்.
Cell phone உபயோகிப்பது தவறு என்று கூறவில்லை. வேலைக்காக, தேவைகளுக்காக அதை உபயோகிக்கலாம். 24 மணி நேரமும் அதை நோண்டிக் கொண்டிருக்க கூடாது. Cell phone நமது ஆத்துமாவை நஷ்டபடுத்தி, நமது பொன் போன்ற காலத்தை பட்சித்து போடும். Cell phone யை நமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் (Bible) இருக்கும் (சங் 149:8). ஆனால் இன்று அநேகர் கையில் இருப்பது cell phone
உலகப்பிரகாரமான எந்த ஒரு விக்கிரகமும் தேவ அன்பில் இருந்து நம்மை பிரித்துவிடாதபடி நாம் நம்மை காத்துக் கொள்ளல் வேண்டும். "கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார் ? (ரோமர் 8:36) என்று அப்போஸ்தலன் மார் தட்டி சவால் விட்டார்.
நீ cell phone ல் செலவிடும் நேரம் அதிகமா ? தேவ சமூகத்தில் (ஜெபம், வேத வாசிப்பு) செலவிடும் நேரம் அதிகமா ?
Cell phoneல் செலவிடும் மணி நேரங்களை உனது பரம தகப்பனோடு ஜெபத்திலும், வேத வசன தியானத்திலும், கர்த்தரை துதிப்பதிலும் செலவிடு. மறக்க வேண்டாம்.
நீண்ட நேரம் உன்னால் தேவ சமுகத்தில் ஜெபத்தில் தரித்திருக்க முடியவில்லை. தேவனுடைய வார்த்தைகள் தேனிலும் தெளி தேனிலும் உனக்கு மதுரமாக இருப்பதில்லை காரணம் தேவன் அருவருக்கும் விக்கிரகங்கள் உனது வாழ்வில் உள்ளன. சங்கிதகாரனை போல அதை தேவ சமூகத்தில் அலசி ஆராய்ந்து கண்டு பிடித்தாக வேண்டும் (சங் 139:23,24)
உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
யோசுவா 23:11
Description: Cell phone ஆகிய விக்கிரகம்.