PUTHU BELAN - புது பெலன்



புது பெலன்

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். - (ஏசாயா 40:31).

மொரீஷியஸ் தீவில் அடர்ந்த காட்டு பகுதியிலுள்ள ஒரு வகை மரத்தை தாவரவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்னறனர். காரணம் உலகிலேயே இவ்வின மரங்கள் 13 மடடுமே உள்ளன. அவற்றின் வயது 300 ஆண்டுகளை தாண்டிவிட்டது. இவைகள் பூத்து குலுங்கியும், காய் கனிகளை தந்தும் அவை இனவிருத்தி அடையவில்லை. இதன் விதையை முளைக்க வைத்தும் அவை முளைக்கவில்லை. இது அறிவியல் மேதைகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆகவே இதை ஒரு குழுவினர் ஆராய்ந்தனர். இறுதியியல் அவர்கள் கூறிய கருத்தாவது, 300ஆண்டுகளுக்கு முன் இந்த மொரீஷியஸ் தீவில் 'டோடு' என்ற பறவையினங்கள் வாழ்ந்து வந்துள்ளன. சாம்பல் நிறம் கலந்த வெண்மை நிறத்தில் கொழு கொழுவென்று அவைகள் காணப்படும். அப்பறவைகள் இந்த மரத்தின் பழங்களை வயிறு நிறைய சாப்பிட்டு அந்த மரத்தின் அடியிலேயே படுத்து உறங்கும். ஆள் நடமாட்டமில்லாத அக்காடுகளில் அவைகள் நிம்மதியாக வாழ்ந்தன. எந்த தொந்தரவுமின்றி வயிறு நிறைய உணவும் கிடைப்பதால், அவை பறக்க முயற்சித்ததேயில்லை உணவிற்காக வேறு இடங்களுக்கு பறந்து செல்ல வேண்டியதுமில்லை.

ஒரு நாள் போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று அத்தீவிற்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து படிப்படியாக பல கப்பல்கள் வரத்தொடங்கின. அவைகளிலிருந்தோர், பறக்கவும் தெரியாத, ஒடவும தெரியாத கொழு கொழு டோடுக்களை எளிதாய் வேட்டையாடினர். வெகு சீக்கிரத்தில் அதன் இனம் அழிந்து போனது, சரி இப்பறவைக்கும் அம்மரத்தின் இனவிருத்திக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? ஆம், உண்டு! இம்மரத்தின் பழங்களை உண்ணும் டோடு பறவைகளின் உணவு பாதையை கடந்து சென்ற விதை மட்டுமே மண்ணில் விழுந்து முளைக்கும். அதன் உணவு பாதையின் ஊக்கிகள் அவ்விதை மீது செயல்படாவிட்டால் புதிய செடிகளை உருவாக்க முடியாது என்பதை கண்டறிந்தனர். சிறகுகளிருந்தும், பறக்க தெரியாத பறவைகள் தன் இனத்தை இழந்ததோடு பிறருக்கும் நன்மை பயக்காமல் போய் விட்டது.

பிரியமானவர்களே, நமக்கு வரும் தோல்விகள், பிரச்சனைகள் இவற்றை மேற்கொள்ளும் விதமாகவே தேவன் நம்மை உருவாக்கியுள்ளார். இப்படி உலகிற்கும் சத்துருவின் தந்திரத்திற்கும் நாம் எதிர்த்து நிற்க ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் பெற்றவர்களாய் இருக்க வேண்டும். கோழி எப்போதும் குனிந்தபடியே தனது உணவாகிய புழுக்களையும் விதைகளையும் பொறுக்கி தின்று கொண்டிருக்கும். யாராவது எதிரிகள் வந்தால் செட்டைகளை அடித்து கொண்டு, கெக்கெக்கெ என்று கத்துமே ஒழிய பறக்கவே பறக்காது. எதிராளி எளிதாக அதை பிடித்து கொள்ள முடியும். ஆனால் கழுகோ, பாய்ந்து வந்து, தன்னுடைய இரையை கால்களில் கெட்டியாக பிடித்து கொண்டு, உயரே பறந்து ஒரு இடத்தில் அமர்ந்து உண்ணும். அதை அவ்வளவு எளிதாக யாரும் பிடித்து விட முடியாது.

அதுப்போலத்தான் நம்மை சோர்வடைய செய்யும் உலகத்தின் காரியங்களை காட்டி பிசாசானவன் நம்மை வீழ்த்த எண்ணும்போது நாம் கழுகுகளை போல செட்டைகளை அடித்து எழும்பிவிட முடியும். அவ்வாறில்லாமல் நாம் பூமிக்குரியவைகளையே சிந்தித்து கொண்டிருந்தால் கோழியை மாதிரி செட்டைகளை அடித்து கொண்டிருப்போமே ஒழிய மேலே பறக்க மாட்டோம். அப்போது சாத்தான் எளிதாக நம்மை வேட்டையாடி விடுவான். கழுகுகளைப்போல நம்முடைய நோக்கமும், இலக்கும் உயர்ந்ததாக, மேலானதாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நமது செயல்களும் பிரயாசங்களும் மேலானதாக இருக்கும். ஆமென் அல்லேலூயா!

கர்த்தருக்கு காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை விரித்து
உயரே பறந்திடுவாய்
சர்ப்பங்களை மிதிப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்துருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த புதிய நாளில் பிரவேசிக்க கிருபை செய்தீரே உமக்கு நன்றி. நாங்கள் உயரே பறக்கும்படியாக எங்களை நீர் தெரிந்து கொண்டபடியால் உமக்கு நன்றி. கழுகின் சந்ததியாக இருக்க வேண்டிய எத்தனையோ பேர், உலகத்தின் காரியங்களில் சிக்கி, கோழிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறதை நீர் அறிந்திருக்கிறீரே. தகப்பனே, அப்படிப்பட்டவர்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து உம்மை நோக்கி பார்த்து, உமக்கு காத்திருந்து புதிய பெலனை பெற்று, கழுகுகளை போல செட்டைகளை அடித்து, உயர எழும்பதக்கதாக பெலனை தருவீராக. கழுகுகளை போன்ற மேலான நோக்கத்தை ஒவ்வொருவருக்கும் தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். 
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.