தேவனையே எதிர்த்து நிற்கும் அளவுக்கு உங்களுக்கு தில் இருக்கிறதா? இருக்கும்!!
"பெருமை" மட்டும் உங்களிடம் இருந்தால்..
பெருமை தேவனுக்கு விரோதமான மிகப்பெரிய ஒரு பாவம். தேவனே பெருமையுள்ள ஒருவனுக்கு எதிர்த்து நிற்பார் என்று சொல்லுகிறது வேதம்..அப்படி என்றால் அவன் யாரிடத்தில் தஞ்சம் அடைய முடியும்? நம் எல்லோரிடத்திலும் பெருமை எப்படியாவது சில நேரங்களில் எழும்பி நிற்கிறது. அதை நாம் சரியாக கவனிக்க தவறியோ அல்லது இருந்தும் அதை இல்லை என்று மறுத்து நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்காமல் நம்மை விட்டு அதை நீக்க வேண்டும். உலக தோற்றத்துக்கு முன்பே காணப்பட்ட இந்த குறிப்பிட்ட பாவம் தான் இன்றைக்கும் மக்களை சிதைத்து கொண்டு இருக்கிறது. நாம் அது நம்மிடத்தில் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டலாம் அல்லது மற்றவர்களை ஏமாற்றலாம். ஆனால் நமக்கும் தேவனுக்கும் அந்த உண்மை தெரியும்.
வாழ்கையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த பெருமை வந்து ஆக்ரமித்து கொள்கிறது. கீழே இருக்கும் பட்டியலை கண்டு நம்மை நாமே தற்பரிசோதனை செய்து நம்மை மாற்றி கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக.
1. என்னுடைய ஆவிக்குரிய வாழ்கையில் என்னிடம் பெருமை உள்ளதா? 2. என் ஜெபத்தை குறித்தோ அல்லது தியானம், பிரசங்கம் போன்ற காரியங்களை குறித்தோ என்னிடம் பெருமை உள்ளதா? 3. என்னுடைய தாலந்து , திறமை போன்றவற்றை உலகுக்கு வெளிப்படுத்தும்போது என்னிடம் பெருமை உள்ளதா? 4. என்னுடைய பொருளாதாரத்தில் , பதவிகளில், உயர்வுகளில் மற்றும் பொறுப்புகளில் என்னிடம் பெருமை உள்ளதா? 5. என்னுடைய வெற்றிகளைப் கொண்டாடும்போது என்னிடம் பெருமை உள்ளதா? 6. நான் மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் வருந்தும்படிக்கு பெருமை என்னிடம் உள்ளதா?7. என்னுடைய ஊழியத்தை குறித்த அதனுடைய வளர்ச்சியை குறித்த பெருமை என்னிடம் உள்ளதா? 8. என்னுடைய அழகு, நிறம், தோற்றம் போன்ற காரியங்களில் என்னிடம் பெருமை உள்ளதா? 9. என்னுடைய குடும்ப மட்டும் நட்பு உறவுகளில் என்னிடம் பெருமை உள்ளதா? 10. என்னுடைய பேச்சில், நடத்தையில், சிந்தையில் என்னிடம் பெருமை உள்ளதா? 11. எனக்கு யாரும் புத்தி சொல்லவேண்டாம், எனக்கே எல்லாம் தெரியும் என்ற பெருமை என்னிடம் உள்ளதா?12. மற்றவர்களை குறைத்து மதிப்பிடும் அளவுக்கு என்னிடம் பெருமை உள்ளதா? 13. எனக்கு பிரபலமான நபர்களை நெருக்கமாக தெரியும் என்ற பெருமை என்னிடம் உள்ளதா? 14. நான் மிகவும் பிரபலமானவன் என்ற பெருமை என்னிடம் உள்ளதா? 15. நான் அதிகமாக காணிக்கை கொடுப்பவன் என்ற பெருமை என்னிடம் உள்ளதா?16. நான் ஒரு மையமான அல்லது தலைமை பொறுப்பில் இருப்பதால் எல்லாரும் எனக்கு கீழே இருந்து என்னை மதிக்க வேண்டும் என்ற பெருமை என்னிடம் உள்ளதா? 17. சமூக வலைதளத்தில் என்னுடைய பங்களிப்பில், என்னுடைய பதிவுகளில் என்னிடம் பெருமை உள்ளதா? 18. நான் ஒரு சிறந்த ஆராதனை நடத்தும் வீரன் என்கிற பெருமை என்னிடம் உள்ளதா? 19. என்னை இவ்வளவு பேர் தொடர்கின்றனர், எனக்கு இவ்வளவு தொடர்புகள் இருக்கிறது என்ற பெருமை என்னிடம் உள்ளதா? 20. கருத்து வேறுபாடு என்று வரும்போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் ஏன் முதலில் பேச வேண்டும்? என்ற ஈகோ கலந்த பெருமை என்னிடம் உள்ளதா?
Bro. Godson GD
Description: Devotional Tamil Message By Bro. Godson GD
Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message.